TAMIL AND TAMILAR
DIASPORA STUDIES INITIATIVE @ FIU

Founder and Lead

Prof. Dr. Kalai Mathee

Tamil and Tamilar Diaspora Studies

Dr. Kalai Mathee is a professor, researcher, and founding faculty member at HWCOM. She is the first FIU faculty member inducted as a Fellow of the American Academy of Microbiology in 2020. She founded the FIU Global Health Conference in 2011 and the Global Health Consortium in 2014.

Champion Your Favorite Cause, Leave a Legacy

Interview with Mr. Jenifa, a reporter for Thozhi (தோழி), a monthly magazine, featuring successful women (ஆளுமைப் பெண்கள்)
“Professor Kalai Mathee who has not forgotten her alma mater (ஆரம்ப பள்ளியை மறவாத முனைவர் கலைமதி).” An article describing Mathee’s efforts to promote and help her elementary school in Malaysia Nanban. Malaysian Nanban is the number one Tamil newspaper in Malaysia https://en.wikipedia.org/wiki/Malaysia_Nanban with 524,000+ readers
The Land that Continues to Weep

The Land that Continues to Weep

The Land That Continues to WeepOnce upon a time, the land from Alaska to Florida Was the land of the brave and free Who served as the guardian Of the earth and every sentient being.

முனைவர் க. கலைமதி, மயாமியில் இருக்கும் புளோரிடா சர்வதேச பல்கலைக்கழகத்தில் (Florida International University/ www.fiu.edu) பேராசிரியர் பதவி பெற்ற முதல் மலேசிய தமிழ் பெண்மணி ஆவார். மலேசியா அரசினர் தமிழ் பள்ளியில் ஆரம்ப கல்வி கற்ற இவர் பல தடைகளைத் தாண்டி உழைத்து பழம்பெரும் அமெரிக்க நுண்ணுயிரியல் கழக (அமெரிக்கன் அகாடமி ஆஃப் மைக்ரோபயாலஜி, American Academy of Microbiology, https://asm.org/Press-Releases/2020/68-Fellows-Elected-into-the-American-Academy-of-Mi) உறுப்பினராக முன்னேறியுள்ளார். மலேசியாவிலிருந்து இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு உறுப்பினர்களில், இவர் முதல் பெண்மணி ஆவார். பேராசிரியர் கலைமதி மறைந்த உலகறிந்த தமிழ் எழுத்தாளர் முனைவர் தமிழ்குயில் கலியபெருமாளின் இரண்டாவது மகள் என்பது குறிப்பிட்டத்தக்கதாகும். தமிழ் மொழியின் மீதுள்ள பெரும் பற்றினால் இவர் புளோரிடா சர்வதேச பல்கலைக்கழகத்தில் தமிழ் மற்றும் புலம்பெயர் தமிழர்கள் ஆய்வுகளுக்கான நிறுவனம் அமைக்க பாடுபட்டு வருகிறார். உள்ளூர், தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் முனைவர் கலைமதியின் கல்வி மற்றும் சேவை பங்களிப்புகள் கணிசமானவை. கல்விக் குழுக்கள், நிரல் மதிப்புரைகள், பத்திரிகை ஆசிரியர் குழுக்கள் போன்ற தளங்களில் தலைமை ஆசிரியர் மற்றும் மாநாட்டுத் தலைவராகவும் பணியாற்றினார்.

கல்வி

மலேசியாவைப் பூர்வீகமாகக் கொண்ட பேராசிரியர் முனைவர் கலைமதி, மலாயா பல்கலைக்கழகத்தில் மரபியல் துறையில் இளங்கலை (B.Sc., 1984) மற்றும் நுண்ணுயிர் மரபியல் துறையில் முதுகலை (M.Sc., 1986) பட்டம் பெற்றார். இவரது அறிவியல் ஆர்வமும் உழைப்பும் இவரை மலேசியாவிலிருந்து அமெரிக்கா கொண்டு சென்றன. இவர், 1992 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் மெம்பிஸ் நகரிலுள்ள டென்னசி பல்கலைக்கழக மருத்துவக்கல்லூரியில் (https://www.uthsc.edu/medicine/) நுண்ணுயிரியலில் மற்றும் நோயெதிர்ப்பு துறையில் முனைவர் (Ph.D.) பட்டத்தைப் பெற்றார். புளோரிடா சர்வதேச பல்கலைக்கழகத்தில் 2018 ஆம் ஆண்டில் சுகாதாரக் கொள்கை மற்றும் நிர்வாகத்தில் உலக சுகாதாரத்தைப் பற்றிய MPH பட்டம் பெற்றார்.

புளோரிடா சர்வதேச பல்கலைக்கழகம்

முனைவர் கலைமதி 1999ல் புளோரிடா சர்வதேச பல்கலைக்கழகத்தின் (எப்ஐயு, FIU, www.fiu.edu) உயிரியல் அறிவியல் துறையில் துணைப் பேராசிரியராக சேர்ந்தார். 2006 ஆம் ஆண்டு மருத்துவக் கல்லூரி உருவாக்கப்பட்டபோது, முதல் நிறுவன ஆசிரியராகவும் (First Founding Faculty, https://medicine.fiu.edu/about/faculty-and-staff/people/matheek.html), நுண்ணுயிரியல் மற்றும் தொற்று நோய்களின் துறைத் தலைவராகவும் (Founding Chair) ஆனார். இவர் 2010 ஆம் ஆண்டு பேராசிரியர் பதவிக்கு உயர்ந்தார். 2011 ஆம் ஆண்டில் அவருக்கு எப்ஐயு இல் மிக உயர்ந்த ப்ரெசிடெண்ட் கவுன்சில் வேர்ல்ட்ஸ் அஹெட் (President’s Council Worlds Ahead Faculty Award, பல்கலைக்கழக முதல்வர் அவையின் உலக முன்நோக்கி) விருது வழங்கப்பட்டது. அவர் 2011 இல் எப்ஐயு உலகளாவிய சுகாதார மாநாட்டையும், 2014 இல் உலகளாவிய சுகாதார கூட்டமைப்பையும் நிறுவினார்.

ஆராய்ச்சி சாதனைகள்

பேராசிரியர் முனைவர் கலைமதியின் ஆராய்ச்சி சாதனைகள் வல்லமையுடையவை. நுண்ணுயிர்களின் ஒன்றான சியூடோமோனாஸ் அருஜினோசாவின் (Pseudomonas aeruginosa) பற்றியும் நுண்ணுயிர்களின் எதிற்பாற்றல் (antibacterial resistance) பற்றியும் உலகளாவிய பரிணாமப் பாதையை தெளிவுபடுத்துவதற்காகச் செய்த ஆய்வுகள் முதன்மையானவை.

அவரது வழிகாட்டிகளுடன், அவர் 120 க்கும் மேற்பட்ட அறிவியல் கட்டுரைகளையும் பல புத்தக அத்தியாயங்களையும் வெளியிட்டுள்ளார். முனைவர் கலைமதிக்கு ஐந்து காப்புரிமைகள் (five patents) உள்ளன. இரண்டு காப்புரிமைகள் தற்போதுள்ள கொல்லிகளால் சிகிச்சையளிக்க முடியாத நுண்ணுயிரிகளைக் குறிவைக்கும் மருந்துகளுக்கானவை. மற்ற இரண்டு தீங்கு விளைவிக்கும் நோய்க்கிருமிகளைக் கண்டறிய. அவர் உலகம் முழுவதும் 120+ விரிவுரைகளை வழங்கியுள்ளார். சமீப காலத்தில் சார்ஸ்-கோவ்-2 மணிமகுட தீநுண்மத்தின் தடுப்புப்பால் பற்றிய விரிவுரைகளைத் தமிழிழும் ஆங்கிலத்திலும் வழங்கியுள்ளார்.

இவரது அறிவியல் வேட்கைக்காக 2014ம் ஆண்டு சர்வதேச அளவிலான நியூ இங்கிலாந்து பயோலாப்ஸ் அறிவியல் பேரார்வ விருது (New England Biolabs Passion in Science Award, https://www.providencejournal.com/article/20141113/NEWS/311139932) வழங்கப்பட்டது. இந்த விருதுக்கு 600 க்கும் மேற்பட்ட பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். முனைவர் கலைமதியின் பலதரப்பட்ட மூலமுதலான அறிவியல் பங்களிப்புகளை அங்கீகரித்த பின்தான் 2020ம் அமெரிக்க நுண்ணுயிரியல் கழக உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பேராசிரியர் முனைவர் கலைமதியின் அறிவியல் பங்களிப்புகளுக்கு உலகளாவிய மரியாதையையும் திறமையையும் அங்கீகரித்து இங்கிலாந்தில் இருந்து படைக்கப்படும் மருத்துவ நுண்ணுயிரியல் (ஜர்னல் ஆஃப் மெடிக்கல் மைக்ரோபயோலஜி;

https://www.microbiologyresearch.org/content/journal/jmm/10.1099/jmm.0.000520) மாத இதழின் 50 ஆண்டுகால வரலாற்றில் முதல் சர்வதேச தலைமை ஆசிரியராக முனைவர் கலைமதி நியமிக்கப்பட்டார். முனைவர் கலைமதியின் தலைமைப் பண்பும் அறிவியல் நுண்ணறிவும் அவர் தலைமை தாங்கி நடத்திய சர்வதேச அறிவியல் மாநாடுகளில் (ஆசிய மாநாடு, 2017; சூடோமோனாஸ் மாநாடு, 2019) வெளிப்பட்டன. அமெரிக்காவில் பணியாற்றிய போதும் அவர் தலைமை தாங்கிய சர்வதேச மாநாடுகளை மலேசியாவில் நடத்தி தனது பிறந்த நாட்டிற்கு பெருமை சேர்த்தார்.

ஆசிரியர் பணி

விரிவுரைத் தவிர பேராசிரியர் முனைவர் கலைமதி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் முதல் பேராசிரியர்கள் வரை 150+ நபர்களுக்கு ஆய்வு வழிகாட்டியாகத் திகழ்ந்துள்ளார். இவர் பஹாமாஸ், பார்பேடோஸ், கனடா, சீனா, கொலம்பியா, டென்மார்க், எகிப்து, பிரான்ஸ், இந்தியா, லைபீரியா, மலேசியா, மெக்சிகோ, நேபாளம், நைஜீரியா, இலங்கை, சுவீடன், தாய்லாந்து, டிரினிடாட் & டொபெகோ முதலிய 18 நாட்டு ஆராய்ச்சி மாணவர்களை வழிநடத்தியுள்ளார். இவரது மாணவர்கள் அனைவரும் உலகளாவிய ஆராய்ச்சி கூடங்களிலும் கல்லூரிகளிலும் பெரும் பதவிகள் வகிக்கின்றனர். இவரது ஆசிரியர் பணியைப் பாராட்டி 2011 ஆம் ஆண்டின் புளோரிடா சர்வதேச பல்கலைக்கழக சிறந்த வழிகாட்டி விருது வழங்கியது.

பொது சேவை

உணவு, ஆரோக்கியம், கல்வி, மூன்றுமே ஒன்று சேரும்போது தான் வறுமை ஒழியும் என நம்புபவர் பேராசிரியர் முனைவர் கலைமதி. உணவு இல்லாமல் தவிக்கும் பிள்ளைகளால் கல்வி பயில முடிய முடியாது என்பதை அறிந்து இவர், தான் பயின்ற மலேசிய தேசிய அரசினர் தமிழ் பள்ளியில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு இலவச காலை மற்றும் மதிய உணவு வழங்குகிறார். இப்பணியை ஆற்ற அங்சா (ANGSA) நிறுவனத்தை அமைத்து ‘பசி போக்கும் பாடசாலை’ எனும் தலைப்பில் நிதி திரட்டி வருகிறார். (https://angsa888.com/donations/hunger-no-more/). மேலும் புளோரிடா சர்வதேச பல்கலைக்கழகத்தில் பயிலும் ஏழை மாணவர்களுக்கான இலவச உணவு சரக்கறைக்கு நிரந்தர விருப்புறுதி கொடை அளித்துள்ளார்.

முனைவர் கலைமதி அவரது நிறுவனத்திலும் பிறநாடுகளிலும் பெண்களின் கல்வியையும் அறிவியல் ஆராய்சியையும் தீவிரமாக ஊக்குவித்துக் கொண்டிருக்கிறார். வளரும் நாடுகளில் அவர் மேற்கொண்ட பணிகள் குறிப்பிடத்தக்கவை. அங்கு அவர் தொடர்ந்து நடத்தும் மாநாடுகள்,

பட்டறைகள் மற்றும் “STEM” (ஸ்டெம், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம்) குழுமங்கள் மாணவர் கல்வியை ஊக்குவிக்க உதவுகின்றன. வளரும் நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு தனது ஆய்வகத்திலும் வெளிநாடுகளிலும் பயிலும் வாய்ப்பினை ஏற்படுத்துகிறார்.

முனைவர் கலைமதி, கருப்பினத்தவர் உரிமைக்காகப் பாடுபட்ட ரெவரெண்ட் டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் கழகத்தின் புளோரிடா சர்வதேச பல்கலைக்கழக முன்னணி உறுப்பினர். இவர் ரெவரெண்ட் டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் வருடாந்திர கண்காட்சியை தொடங்கி வழிநடத்துகிறார். மார்ட்டின் லூதர் கிங் பெருமைகளை நினைவு கூறும் வருடாந்திர பேச்சாளர் அறக்கட்டளை மற்றும் மாணவர் உதவித்தொகை அறக்கட்டளையை தொடங்கிய பெருமையும் இவரையே சேரும்.

பேராசிரியர் முனைவர் கலைமதி தனது கணவர் பேராசிரியர் முனைவர் கிரி நரசிம்மன் உடன் இணைந்து தனது சம்பாத்தியத்தின் ஒரு பங்கினை புளோரிடா சர்வதேச பல்கலைக்கழக (FIU) மருத்துவ மற்றும் கணினி பட்டப்படிப்பு மாணவர்களுக்கு எழுதிவைத்துள்ளார்கள்.

(https://fiu.giftplans.org/index.php?cID=279). பேராசிரியர் கலைமதியின் தளராத முயற்சிக்கு புளோரிடா சர்வதேச பல்கலைக்கழகத்தில் 2021ஆம் சிறந்த பொது சேவை விருதினை வழங்கினர். தன்னுடய அனைத்து முயற்சிகளுக்கும் தனது கணவர் உறுதுணையாக இருப்பது தனக்கு மேலும் பலமளிப்பதாக முனைவர் கலைமதி நெகிழ்கிறார்.

தமிழ் பணி

முனைவர் கலைமதி புளோரிடா சர்வதேச பல்கலைக்கழகத்தில் தமிழ் மற்றும் புலம்பெயர் தமிழர் ஆய்வுகளுக்கான (Tamil and Tamilar Diaspora Studies) நிறுவனம் அமைக்க முயற்சி செய்து வருகிறார் (https://give.fiu.edu/areas-of-giving/campaigns/tamilarstudiesinitiative/index.html).
தமிழ் மொழி (இலக்கியம், வரலாறு), தமிழறிகளின் கலை (இயல், இசை, நாடகம், சிற்பக்கலை, கட்டடக் கலை, தற்காப்பு கலைகள்), ஆராய்ச்சிகள் செய்வதற்கும் கற்பிப்பதற்கும் ஒரு வலுவான, தன்னிறைவு நிறுவனத்தை உருவாக்குவதே அவரின் குறிக்கோள். இதில் வள்ளுவர் மற்றும் வள்ளலார் அறக்கட்டளைகள் நிறுவப்பட்டு அவர்களின் வாழ்கை முறையும் படைப்புகளும் பாடமாக கற்பிக்கப் பட்டப்படிப்பாக உருவாக்க இவர் முனைகிறார்.

உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்கள், தங்கள் மொழியும் கலாச்சாரமும் தங்கள் மரபுகள் மற்றும் வரலாற்றின் செழுமையைப் புரிந்துகொள்வதற்கும் நிலைத்திருப்பதற்கும் ஒரு நிறுவனத்தை நிர்மாணிக்க இது சரியான தகுணம் என்று பரிந்துரைக்கிறார். பல்வேறு பல்கலைக்கழகங்கள் இம்முயற்சியை துவங்கி இருந்தாலும் அவை தனி ஒருவரால் இயங்கும்படி இறுக்கின்றன. எனவே ஒன்றுக்கு மேற்பட்ட பேராசிரியர்களை உள்ளடக்கிய, தமிழ் ஆய்வின் அனைத்து அம்சங்களையும் ஒன்றிணைக்கும் ஒரு நடுவத்திற்குப் பெரும்தேவை உள்ளது. இப்படி ஒரு நிறுவனம் இது வரை எங்கும் நிறுவப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது வருங்கால சந்ததியினருக்கு நாம் விட்டுச் செல்லும் பரிசு. நம் கடமையும் கூட என்று மனப்பூர்வமாக நம்புகிறார் முனைவர் கலைமதி
இவரின் இந்த முயற்ச்சி பெரும் பாராட்டுதலுக்குரியது.

இந்நிறுவனம் பலதரப்பட்ட தமிழ் ஆர்வலர்களின் ஒருங்கிணைந்த முயற்ச்சியால் இயக்கப்பட்டு உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கான ஒரு தன்னார்வல நிறுவனமாக திகழும். பேராசிரியர் கலை மதியின் தமிழ் புலம்பெயர் தமிழர் ஆய்வு நிறுவன முன்முயற்சிக்கு 2021ஆம் ஆண்டு சென்னையில் இயங்கி வரும் தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்திற்கான சர்வதேசக் கலைக்கூடம் “வளர்தமிழ் மாமணி” விருதினை சூட்டினர். இவ்விருது மொழி மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாக்கும் அறிஞர்கள், தனி நபர்கள், அமைப்புகள் ஆகியவற்றை அடையாளங்கண்டு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது

கட்டுரை எழுதியவர்

முனைவர் அம்ரீதா சக்திவேல்
நுண்ணுயிரியல் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை, இந்தியா.
மனித மூலக்கூறு மரபியல் துறை, புளோரிடா சர்வதேச பல்கலைக்கழகம், மயாமி, அமெரிக்கா.

 

Kalai Mathee is the first Florida International University (FIU) faculty member inducted as a Fellow of the American Academy of Microbiology. Mathee is a professor and researcher at the FIU Herbert Wertheim College of Medicine (HWCOM). Of the two Malaysians ever inducted, she is the second and the first woman educated in her vernacular language of Tamil.

She is one of 68 new fellows selected by the Academy this year. The Academy is the honorific leadership group within the American Society for Microbiology, one of the oldest and largest life science societies globally. The fellows are voted in through a highly selective peer-review process that focuses on their original contributions to advance science and microbiology. The following countries are represented in the class of 2020: Australia, Austria, Brazil, Chile, China, France, Germany, Israel, Switzerland, the United Kingdom, and the United States. The fellows came from many prestigious institutions — Harvard, University of California-Berkely, University of Wisconsin-Madison, University of California-San Francisco, Johns Hopkins, Max Plank Institute, and University of Cambridge, to name a few.

Mathee joined FIU in 1999 as an assistant professor in the Department of Biological Sciences. When the FIU medical school was created, she became the first founding faculty and the founding chair of the HWCOM Department of Molecular Microbiology and Infectious Diseases. She played a significant role in establishing the medical school at FIU. She rose to the rank of Professor in 2010. She founded the FIU Global Health Conference in 2011 and the Global Health Consortium in 2014. 

She helped to establish several endowments at FIU: Dotson Family Endowment for the Rev Martin Luther King Commemorative Breakfast Speaker, Robert M. Coatie Youth Forum, MLK Scholarship, Food Pantry, Robert Smiddy Undergraduate Excellence in Research, Barbara Bader Endowment for Leadership, among many others. She founded several initiatives within the MLK forum, the College Liaisons Committee that brings every college participation at the MLK commemorative celebrations, the MLK Hall of Fame (2011) to recognize alumni of color, and  MLK at the Frost (2011) to expand the civil rights conversation beyond breakfast. She was the sole recipient of the 2021 FIU Faculty Senate Service Award

She has mentored 160+ individuals, from professors to middle-school students. Along with her mentees, she has published more than 130 articles and several book chapters in alginate gene regulation, antimicrobial resistance, gut and lung metagenome and microbiome, alternate therapeutics, forensic science, comparative genomics, and bioinformatics. She has five patents to her credit. In 2011, she received Faculty Award for Excellence in Mentorship. In 2014, she was one of the inaugural recipients of the international New England Biolabs Passion in Science Award for exemplary scientific mentorship and advocacy. 

Mathee has given 130+ lectures across the globe. She is sought after by many universities to serve on their various boards. She serves as the editor-in-chief and Norman Fry of Public Health England of the Journal of Medical Microbiology, the first international editor in its 50-year history. 

Mathee received the 2011 President’s Council Worlds Ahead Faculty Award, the highest honor at FIU for a faculty committed to excellence and expanding the students’ horizons.

Mathee received her Ph.D. in Microbiology and Immunology (focus on molecular microbiology) at the University of Tennessee, Memphis, in 1992 and her master’s in public health, majoring in health policy and management in 2018 from Florida International University. A native of Malaysia, she obtained a Bachelor of Science in Genetics (1984) and a Master of Science (1986) in Microbial Genetics from the University of Malaya.